--> -->

கிண்ணியாவில் டைனமைட் வெடிபொருள் வெடித்ததில் இருவர் உயிரிழப்பு

ஜூன் 11, 2020
கிண்ணியா பெரியாற்றுமுனை பிரதேசத்தில் டைனமைட் வெடிபொருள் தற்செயலாக வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். 
 
செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோத மீன்பிடிக்காக டைனமைட் வெடிபொருட்களைத் தயாரித்த வேளையில் குறித்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸ் தெரிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட இருவரும் கிண்ணியா குட்டிகராச்சி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.