--> -->

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 78 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

ஜூன் 11, 2020

இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  78 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் நேற்று (ஜூன் 10) தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளர்.

தியதலவை, பூசா மற்றும் கந்தளாய் ஆகிய தனிமைப்படுத்தல் நிலையங்களில் இரண்டு வாரம் தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தவர்களே இவ்வாறு வீடு திரும்பினர்.

இவ்வாறு வீடு திரும்பிய அனைவரும் தமது மருத்துவ பரிசோதனைகளை நிறைவுசெய்து தனிமைப்படுத்தலுக்கான  சான்றிதழ்கள்களையும் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.