--> -->

223இலங்கையர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து நாடுதிரும்பினர்

ஜூன் 12, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் சிக்கித்தவித்த இலங்கையர்களில் குழந்தை உட்பட  223 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை (ஜூன் 11) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைதனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் இருந்து வருகைதந்த இவர்கள் யூ எல் 1423 இலக்க இலங்கை எயார்லைன்ஸ் விமானம் அழைத்துவரப்பட்டனர்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட அனைவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக விமானநிலைய பொறுப்பு முகாமையாளர் விதுரு பெரேரா பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.