--> -->

கடற்படையினரால் சட்டவிரோத சந்தனக்கடத்தல் முறியடிப்பு

ஜூன் 12, 2020

இலங்கை கடற்படையினர்  ஹம்பாந்தோட்டை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கைகளின்போது ஒரு தொகை   சந்தன மரக்கட்டைகளை  சட்டவிரோதமான முறையில் கடத்திச்செல்லும்போது நேற்று (ஜூன் 11) கைப்பற்றியுள்ளனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்ட்ட குறித்த நடவடிக்கைகளின்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24-42 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் குறித்த இரு சந்தேக நபர்களுடன் சட்டவிரோதமான முறையில் சந்தன மரக்கட்டைகள் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இக்கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.