--> -->

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மூவர் மாத்திரமே பதிவு

ஜூன் 13, 2020

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 11 நோயாளர்கள் பதிவாகியதுடன், அவற்றில் கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே நேற்று (12) அடையாளம்காணப்பட்டனர். இப்பதிவானது நாட்டில் கொரோனா தொற்றாலர்கள் குறைவடைந்து செல்வதை இப் புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.

இவ்வாறு இனங்காணப்பட்ட மூவரில் இருவர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவரெனவும்  தெரிவிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 35 கடற்படை வீரர்கள் நேற்று  வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் தெரிவித்துள்ளது.