--> -->

மொத்தமாக 682 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடுதிரும்பினர்

ஜூன் 13, 2020

இதுவரைக்கும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த  கடற்படை வீரர்கள் மொத்தமாக 682  பேர் வைத்தியசாலையில் இருந்து  குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் இரு கடற்படை வீரர்கள் நேற்று  (ஜூன் 12) அடையாளம் கானப்பட்டதை அடுத்து, தொற்றுக்குள்ளான வீரர்களின் மொத்த எண்ணிக்கை 876ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய  194 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவகின்றனர்.