--> -->

இராணுவம் மற்றும் விமானப்படையினரால் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள்

ஜூன் 14, 2020

பண்டாரவெல டோவா மகாவங்குவயில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயினை  இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் இணைத்து  இன்று (ஜூன் 14)  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படை வீரர்கள் மற்றும் தியதலாவாவையிலுள்ள  விமானப்படை வீரர்கள் ஆகியோர் பண்டரவெலை நகர சபையின் தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.