--> -->

130 இலங்கையர்கள் பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பினர்

ஜூன் 15, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித்தவித்த இலங்கையர்கள்   130 பேர் கொண்ட குழுவினர் இன்று அதிகாலை (ஜூன் 15) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமானநிலைய பொறுப்பு முகாமையாளர் இரேஷா ஜயசூரிய தெரிவித்தார்.

லாஹூர் மற்றும் கராச்சி மாநில பகுதிகளில் இருந்து யூ எல் 1282 இலக்க இலங்கை எயார்லைன்ஸ் விமானம் மூலம் அழைத்துவரப்பட்ட அனைவருக்கும்  பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பீ சீ ஆர்  பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக விமானநிலைய பொறுப்பு முகாமையாளர் ஜயசூரிய பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் 61 பேர் இராணுவத்தை சேர்ந்தவர்கள் என கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.