--> -->

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது

ஜூன் 15, 2020

சொய்சாபுர துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்திய வாகனத்தின் சாரதி என் நம்பப்படும் சந்தேகநபர் புத்தளையில் வைத்து முச்சக்கரவண்டியுடன் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

மொறட்டுவ பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய குறித்த சந்தேக நபர் புத்தளையில் இருந்து  குறித்த பகுதிக்கு ஆயுதங்களை கொண்டுசெல்வதற்கு இம்முச்சக்கரவண்டி பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரைனைகளின்போது, மொரட்டுவை வீடொன்றில் இருந்து டீ 56 ரக ஆயுதம், இரண்டு  வெடிபொருட்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்கிசை பொலிஸார் சந்தேகநபர் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.