--> -->

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 708 கடற்படை வீரர்கள் குணமடைந்து வீடுதிரும்பினர்

ஜூன் 15, 2020

நாட்டில் இதுவரைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த  கடற்படை வீரர்கள் சுமார் 708  பேர் வைத்தியசாலைகளில் இருந்து  குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையம் இன்று (ஜூன் 15) தெரிவித்துள்ளது.

தற்போதைய அறிக்கையின் பிரகாரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 882 கடற்படை வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, வைரஸ் தொற்று அடையாளம்காணப்பட்ட 174 கடற்படை வீரர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருவதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.