--> -->

பொலிஸ் கான்ஸ்டபிள் சார்ஜன்ட்டாக தரமுயர்த்தப்பட்டார்

ஜூன் 15, 2020

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த அரச புலனாய்வு சேவையின் பொலிஸ் கான்ஸ்டபிள் சித்தும் அழகப்பெரும பொலிஸ் சார்ஜன்ட் டாக தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவினால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

சார்ஜன்ட் சிந்தும்  அழகப்பெரும கடந்த 11ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திறமையான இளம் பொலிஸ் அதிகாரியான இவர் அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற 7.9 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளை சம்பவத்தை துணிகரமாக முறியடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.