--> -->

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர் பங்கேற்பு

ஜூன் 15, 2020

அண்மையில் (ஜூன் 13) கண்டி மாவட்ட 11 ஆவது பிவிவின் கீழுள்ள 111 படைப்பிரிவை சேர்ந்த இலங்கை இராணுவத்தினர் தம்வள, முருதலாவை, மஹகந்தை மற்றும் கெங்கல்ல ஆகிய பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அடையாளம் கண்டு அதனை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.   

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அமைய குறித்த பகுதிகளிலும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.