--> -->

டுபாயிலிருந்து 289 இலங்கையர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை

ஜூன் 18, 2020

டுபாய் நாட்டிலிருந்து 289 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 226 விமானத்தின் டுபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தனுஜ சமரதுங்க தெரிவித்தார்.

நாடு திரும்பிய அனைவரும் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.