--> -->

கொழும்பில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொலிஸார்

ஜூன் 19, 2020

தெஹிவளை, கல்கிசை, அங்குலான மற்றும் ரத்மலான பிரதேசங்களில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது போதைப்பொருளுக்கு அடிமையான ஐவர் கைது செய்யப்பட்டதை அடுத்து இப்பிராந்தியத்தில் பொலிஸார் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள், 22 முதல் 37 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கைது செய்யப்படும் போது அவர்களிடம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் அவர்கள் போலீசார் தெரிவித்துள்ளனர்

அண்மையில், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடம் உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, எதிர்காலத்தில், போதைப்பொருள், பாதாள உலக செயற்பாடுகள், திட்டமிடப்பட்ட குற்றங்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச் செயல்களற்ற பாதுகாப்பான நாட்டில் அனைத்து சமூகங்களும் நிம்மதியாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்படும் என உறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.