--> -->

பெண் இராணுவ சிப்பாய் தர்ஷிகா ஜேசுதாசனுக்கு இராணுவத்தினரால் புதிய வீடு நிர்மாணம்

ஜூன் 19, 2020

பலாலி முகாமில் பணியாற்றும் தர்ஷிகா ஜேசுதாசன் எனும் இராணுவ பெண் சிப்பாய்க்கு யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தினால் புதிய வீடொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள நன்கொடையாளர்களின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டின் சாவி, யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் நேற்றைய தினம் (ஜூன், 18) வீட்டின் முன்றலில் இடம்பெற்ற எளிய வைபவத்தின் போது பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

ஒட்டகபுலம் 11வது விஜயபாகு காலாட்படை வீரர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டிற்கு கொழும்பைச் சேர்ந்த குமார் வீரசூரிய மற்றும் அவரது நண்பர்கள் நிதியுதவி வழங்கியுள்ளனர். இந்த நன்கொடையாளர்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் பல வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிதியளித்துள்ளனர்.

7வது இராணுவ மகளிர் படை ஆட்சேர்ப்பில் இராணுவத்தில் இணைந்த ஊர்கவற்துறையச் சேர்ந்த தர்ஷிகா ஜேசுதாசன்  பலாலியில் உள்ள யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். மேலும், தர்ஷிகாவின் தந்தை, கணபிரகாசம் ஜேசுதாசன் என்பர் இலங்கை கடற்படை வீரராகும்.

சுகாதார வழிகாட்டுதலுக்கு ஏற்ப இடம்பெற்ற இந்த நிகழ்வில் வலிகாமம் பிரதேச செயலாளர், 52வது பிரிவின் கட்டளைத்தளபதி, பிரிகேட் கட்டளைத் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், நன்கொடையாளர்கள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.