--> -->

வெலிசர கடற்படை தளத்தின் செயல்பாடுகள் வழமைக்கு

ஜூன் 21, 2020

வெலிசர கடற்படைத் தளம் நாளை (ஜூன் 22) முதல் நாளாந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக  கடற்படைப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர்  இசுரு சூரியபண்டார  தெரிவித்தார். இதற்கேற்ப வெலிசர கடற்படைத் தளத்தின் நாளாந்த செயற்பாடுகள் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பல கட்டங்களாக  ஆரம்பிக்கப்படவுள்ளதாக  அவர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கடற்படை தளத்தின் செயல்பாடுகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவர்  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்தியர்.  அனில் ஜாசிங்க அண்மையில்  அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.