--> -->

இரண்டு வாரங்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 6,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது

ஜூன் 21, 2020

பொலிஸ் விஷேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வு  பிரிவு ஆகியோரினால் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும்தேடல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட  தேடுதல்  நடவடிக்கைகளின்போது சுமார் 6,000 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இம்மாதம் ஆறாம் திகதி ஆரம்பமான தேடுதல் நடவடிக்கையின் போது 5 கிலோ ஹெரோயின் மற்றும் 217 கிலோ கஞ்சாவுடன்  6,420 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அத்துடன்  7 கைக்குண்டுகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த 6 சந்தேக நபர்கள் வெவ்வேறு  சம்பவங்களின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த காலப்பகுதியில்  சட்டவிரோத மதுபானம் தயாரித்த  மற்றும் விற்பனை செய்த 5,574 நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை,  பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டுவந்த  5,000 க்கும் மேற்பட்ட  சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம்  16ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, , பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, எதிர்காலத்தில்,போதைப்பொருள் அச்சுறுத்தல், பாதாள உலக நடவடிக்கைகள்,திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச் செயல்களற்ற சூழலில்  அனைத்து சமூகங்களும் சுமூகமாகவும்  பாதுகாப்பாகவும் வாழும் நாடக உருவாக்கப்படும் என குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.