--> -->

படைவீரரின் ஆயுதத்தை பறிக்க முயன்ற நபர் பலி

ஜூன் 22, 2020

யாழ்ப்பாணம், கிளாலி பகுதியில் கடமையிலிருந்த படைவீரரின் ஆயுதத்தை கைப்பற்றி தப்பிச்செல்ல முயற்சித்த நபர் நேற்று மாலை 1.30 மணியளவில் பலியாகியுள்ளார்.   

கண்ணிவெடிகள் காரணமாக பொதுமக்கள் செல்ல தடை வித்தித்திருந்த பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த சிவிலியன் குழுவினரை கிளாலி பகுதியில் கடமையிலிருந்த படைவீரர் அவதானித்துள்ளார். அவர்களில் ஒருவரை குறித்த படை வீரர் சோதனைக்கு உட்படுத்தியபோது, குறித்த நபர் படைவீரரை தாக்கிவிட்டு ஆயுதத்தை கைப்பற்றி தப்பிச்செல்ல எத்தனித்துள்ளார். இதன்போது தற்காப்புக்கா படைவீரரினால்  மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.

இவ்வாறு துப்பாக்கி சூட்டில் காயங்களுக்கு உள்ளான சந்தேக நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

மேலும், சட்டவிரோத மணல் அகழ்வு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது ஏனைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மணல் அகழ்வுக்கு பயன்படுத்திய உளவு இயந்திரம் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட வாகனங்களும் மேலதிகவிசாரனைகளுக்காக பாளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.