--> -->

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன்ரம்புக்கனையில் இருவர் கைது

ஜூன் 22, 2020

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் 1.527 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.  

ரம்புக்கனை வல்கம வீதியில் வசிக்கும் 27 வயது ஆண் ஒருவரும் 50 வயது பெண் ஒருவரும் கேகாலை பொலிஸாரின் திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கேகாலை - ரம்புக்கனை ரயில்வேக்கு குறுக்கு வீதியின் அருகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் இன்று கேகாலை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ரம்புக்கனை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

இதேவேளை, வரகாபொல பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் 1.8 மில்லியன் ரூபா கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கேகாலை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.  

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்களில் 13 குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த சந்தேக நபரினால் கொள்ளையிடப்பட்ட பணம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.