--> -->

துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட சந்தேக நபர்கள் இன்று நீதமன்றத்தில் ஆஜர்

ஜூன் 23, 2020

யக்கலமுல்ல, வாத்தஹென பகுதியை சேர்ந்த  33 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு குறுந்தூர துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதவான் நீதி மன்றத்தில் இன்று  (ஜூன் 23) ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

யக்கலமுல்ல பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பிரகாரம் நேற்று மாலை இவ் இரு சந்தேக நபர்களும்  துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யக்கலமுல்ல பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.