--> -->

154 இலங்கையர்கள் லண்டனிலிருந்து தாயகம் வருகை

ஜூன் 24, 2020

லண்டனிலிருந்து 154 இலங்கையர்கள் இன்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் யூ எல் 504 இலக்க இலங்கை எயாலைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் ஜனித் விதானபத்திறன தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலை யூ எல் 303 இலக்க விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து  85 இலங்கையர்கள் வர திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் 14 நாட்களுக்கு முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கடமை நேர முகாமையாளர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்ததளத்திற்கு  தெரிவித்தார்.