--> -->

பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமனம் பெற்ற அதேவேளை , 19 அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ஜூன் 25, 2020

சிறைச்சாலை சேவைகளின் தேவைகருதி உடனடியாக செயற்படும் வண்ணம் 19 சிறைச்சாலை அதிகாரிகள் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ள  அதேவேளை, பிரதம சிறைச்சாலை அதிகாரிகள் ஆறுபேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயற்படும் மோசமான நிலை உருவாகிவருவதுடன், இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பிரதம சிறைச்சாலை அதிகாரிகளில்  நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளபட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து போதைபொருள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை அறியப்பட்டது.    

சிறைச்சாலையில் இருந்து முன்னெடுக்கப்படும் குற்றச்செயல்கள் மற்றும் பாதாள உலக போதைபொருள் செயற்பாடுகளை நாட்டிலிருந்து இல்லாதொழித்து சிறைச்சாலை செயற்பாடுகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அரசின் எதிபார்ப்புக்கமைய அண்மையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.