--> -->

பாதாள உலக போதைப்பொருள் வியாபாரி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி

ஜூன் 26, 2020

பாதாள உலக போதைபொருள் வியாபாரியான ரன்கொத் படிகே சஞ்சீவ சம்பத் என அழைக்கப்படும் கெடவளபிட்டிய சம்பத் கம்பஹா பகுதியில் பொலீஸார் இன்று காலை (ஜூன் 26) மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.   

பலியாகிய பாதாள உலக குற்றவாளியான குறித்த நபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனரத்ன தெரிவித்தார்.    

கம்பஹா மிரிஸ்வத்தையிலுள்ள மல்வத்து ஹிரிபிடிய பொலிஸ் சோதனை சாவடியில் சந்தேக நபரால் பொலீசார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தின்போதே இவர் பலியாகியுள்ளார்.