--> -->

சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்த சந்தேக நபர் கைது

ஜூன் 26, 2020

பூகொடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் குறுந்தூர துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த 41 வயது சந்தேகநபர் ஒருவரை பூகொடை போலீசார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  

குறித்த பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகளுக்கமைய முன்னெடுக்கப்பட சோதனை நடவடிக்கையின்போது குறித்த குறுந்தூர துப்பாக்கி கைப்பற்றப்பட்டதுடன், குறித்த துப்பாக்கியானது வெளிநாடொன்றிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பூகொடை ஓவிடிகம பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபரிடம் இருந்த இரண்டு தோட்டாக்களுடன் வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.  

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூகொடை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.  

இதேவேளை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறுந்தூர துப்பாக்கி ஒன்றுடன் மல்லாவி பகுதியில் 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) ஆஜர்படுத்தப்பட உள்ளார்.  

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.