--> -->

கொழும்பில் கப்பம் கோரிய ஐவர் கைது

ஜூன் 26, 2020

கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பகுதியில் கப்பம்கோரல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டுவந்த ஐவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று (26) புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.      

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அனைவரும் கொழும்பு மனிங் சந்தைக்கு மரக்கறிகளை ஏற்றிச்செல்லும் லொறிகளிடம் இருந்து கப்பம் கோரிய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.