--> -->

171 இலங்கையர்கள் லெபனானிலிருந்து தாயகம் வருகை

ஜூன் 26, 2020

லெபனான் பேரூட்நகரிலிருந்து 171 இலங்கையர்கள் இன்றைய (26)  தினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் யூ எல் 1506 இலக்க இலங்கை எயாலைன்ஸ் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின் பின்னர் 14 நாட்களுக்கு முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கடமை நேர முகாமையாளர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்ததளத்திற்கு  தெரிவித்தார்.