--> -->

பங்ளாதேஷிலிருந்து 230 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூன் 27, 2020

பங்ளாதேஷ் நாட்டில் இருந்த சுமார் 230 இலங்கையர்கள் இன்று மாலை (26) தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL1190 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.