--> -->

ஈரானிய கடற்படைக் கப்பல் இலங்கை வருகை

பெப்ரவரி 16, 2019

நான்கு நாட்களை கொண்ட பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு மூன்று ஈரானிய கடற்படைக் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த புஷேஹ்ர், லவன் மற்றும் பெயண்ட்தொரே ஆகிய ஈரானிய கடற்படை கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்

மேலும், நான்கு நாட்கள் தரித்திருக்கவுள்ள இம்மூன்று கப்பல்களின் கடற்படை சிப்பாய்கள் இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதுடன் குறித்த இக்கப்பல்கள் மூன்றும் இம்மாதம் மாதம் பதினெட்டாம் திகதி புறப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.