--> -->

முகக்கவசம் அணியத்தவறிய 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைப்பு

ஜூலை 01, 2020

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் மேல்மாகாணத்தில் பொலிஸாரினால் இன்று  (ஜூலை, 01) மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கைகளின் போது, பொது இடங்களில் முகக்கவசம் அணியத்தவறிய 162 பேர் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் அறிவுருத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளிகளை பேணுதல் போன்ற சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொலிஸார் விஷேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சரியான முறையில் முகக்கவசம் அணியத்தவறிய சுமார் 905 நபர்கள்  எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.

மேலும் இரண்டாவது கொரோனா அலை பரவலில் இருந்து பொதுமக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடக்குமாறு பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.