--> -->

போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்புடைய 11 அதிகாரிகள் கைது

ஜூலை 03, 2020

போதைபொருள் வியாபாரிகளுடன் நெருக்கிய தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 11 அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றன.

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளைப்பேணிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர், இரு சாஜன் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவருமாகும்.

இவ்வாறு கைது செய்யப்பட 11 சந்தேகநபார்களில்  ஒரு தொகை போதைப்பொருளை போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மீள விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில்  பொலிஸ் பரிசோதகர் மற்றும்  உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    

இதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் மேலதிகவிசாரனைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் குறித்த அதிகாரிகளை எதிர்வரும் (ஜூலை 08) புதன்கிழமை வரை தடுப்புகாவலில் வைத்து விசாரிப்பதற்காக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.