--> -->

மண்டைத்தீவு கடற்பரப்பில் 60 மில்லியன் பெறுமதியான கேராள கஞ்சா கடற்படையினர் வசம்

ஜூலை 03, 2020

வடக்கில் சுமார் 60 மில்லியன் ரூபாய் பெறுமதியான 400 கிலோ கேராள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே மேற்படி பெருந்தொகை கேரள கஞ்சா கைப்பற்றபட்டதாக கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார பாதுகாப்பு அமைச்சு இணைய தளத்திற்கு தெரிவித்தார்.