--> -->

பஹ்ரைனில் இருந்து 83 இலங்கையர்கள் தாயகம் வருகை

ஜூலை 05, 2020

பஹ்ரைனிலிருந்து 83 இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL 202 எனும் விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் ஜெனித் விதாரனபத்திரன தெரிவித்தார்  

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள்,  பிசிஆர் பரிசோதனையின் பின் படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.