--> -->

முல்லேரியா பிரதேசத்தில் 56.46 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது

ஜூலை 07, 2020

விநியோகத்திற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த 56 கிலோகிராம் கஞ்சாவுடன் முல்லேரியா களனி நதி வீதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.   

விசேட அதிரடிப்படை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களுக்கமைய இந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.   

குறித்த சம்பவத்தில் கார் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.    

இந்த சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.