--> -->

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த ஜப்பான் நிதி உதவி

ஜூலை 14, 2020
இலங்கை பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை திறனை மேம்படுத்த ரூ. 340 மில்லியன் நிதி உதவி வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
 
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளிற்கினங்க அவசியமான உபகரணங்களை ஜப்பானிய அரசாங்கம் மானிய உதவி திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
 
பொலிஸாரின் போதைப்பொருள் கண்டறியும் திறன்களை நவீனமயமாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த மானிய உதவி பயன்படுத்தப்படவுள்ளது.
 
இந்த மானியம் தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகலவும் ஜப்பானிய அரசாங்கத்தின் சார்பில் ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிராவும் கைச்சாத்திட்டனர்.