--> -->

ஆயுத பயிற்சி நடவடிக்கைகளுக்காக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையத்தினால் 'ப்ளூ கன்' தயாரிப்பு

ஜூலை 20, 2020

மற்றுமொரு வெற்றிகரமான ஆராய்ச்சித் திட்டத்தை நிறைவு செய்துள்ள பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் அண்மையில் இலங்கை இராணுவத்தின் விசேட படையணிக்காக  'ப்ளூ கன்' உற்பத்தி முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த உற்பத்தி திட்டமானது, பாவனையில் உள்ள உண்மையான  ஆயுதங்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைத்து அதன் செயல்திறன் காலத்தை அதிகரிக்கச் செய்யும் அதேவேளை, பயிற்சி பெற்றுக்கொள்பவர்களின்  பாதுகாப்பை உறுதி செய்யும்.

இதற்கமைவாக எச்பி பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் எச்கே ரக துப்பாக்கி ஆகியவற்றின் நகல் துப்பாக்கிகளை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான மத்திய நிலையம் உருவாக்கியுள்ளது.

ப்ளூ கன் என அழைக்கப்படும் இவ்வகை துப்பாக்கிகள், உண்மையான துப்பாக்கி ரவைகள் இன்றி ஆயுத கையாள்கை மற்றும் பயிற்சிகளுக்கு உலகின் தொழில்முறை ரீதியில்  பெரிதும் பயன்படுத்தப்படும் ஆயுத வகையாகும்.

அதிக விலைகளில் விற்பனை செய்யப்படும்  ப்ளூ கன்கள் சர்வதேச சந்தைகளில் மட்டுமே கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.