--> -->

ஆழ்கடலில் தத்தளித்த கென்ய நாட்டு கப்பலுக்கு இலங்கை கடற்படை உதவி

ஜூலை 24, 2020

மின்தடை காரணமாக ஆழ்கடலில் தத்தளித்து கொண்டிருந்த கென்ய நாட்டு கப்பல் ஒன்றை  இலங்கை கடற்படையின்  சிந்துறல  கப்பல் இன்று (24) மீட்டுள்ளது. இக்கப்பல் இலங்கையின் காலி கடற்பரப்பிலிருந்து சுமார்  170 கடல் மைல் தொலைவில்  (306 கிலோமீட்டர்) வைத்து மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.     

கென்யாவில் உள்ள மொம்பாச துறைமுகத்திலிருந்து   13 பணியாளர்களுடன் புறப்பட்டு வந்த ஹொரக்தி என்றழைக்கப்படும் கென்ய நாட்டு கப்பலே இவ்வாறு மின்தடை காரணமாக ஆள் கடலில் தத்தளித்த நிலையில் இருந்ததாக கடற்படை பேச்சாளர் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தலத்திற்கு தெரிவித்தார்.

மேற்படி கப்பல் திருத்தப்பட்ட பின்னர் தான் சென்றடையவிருந்த அடுத்த துறைமுகத்தை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கடற்படையின் கடல்சார் மீட்பு நடவடிக்கை பிரிவினர் கடந்த ஏழு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம்  இதுபோன்ற 41 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் இவ்வாறு அனர்த்தங்களில் சிக்கிய சுமார் 34 கப்பல்களையும் அதில் பயணித்த 103 பயணிகளின் உயிர்களையும் பாதுகாத்து மீட்டெடுத்துள்ளதாக கெப்டன் இந்திக டி சில்வா மேலும் தெரிவித்தார.