--> -->

விமானப்படையினரின் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 165 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு.

ஜூலை 29, 2020

வன்னியில் இலங்கை விமானப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட165 பேர் இன்று காலை (ஜூலை, 29) வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இவர்களுக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்ட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இராணுவத்தினரால்  முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் மையத்தில் இரண்டு வார கால தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 555 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.  

இதற்கமைய, பெரியகாடு தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 118 பேரும், பூவரசங்குளம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 193 பேரும், கஹகொல்ல தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 176 பேரும், பூனாணி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 68 பேரும் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் படையினரால் நிர்வகிக்கப்படும் 40 தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தம் 3,102 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.