கொரோனா நிதியத்திற்கு ரூபா 250,000 காசோலை தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபை அன்பளிப்பு

ஆகஸ்ட் 28, 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபையினால்  இடுகம கொரோனா நிதியத்திற்கு  இன்று (28) ரூபா  250,000 அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான காசோலை பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபையின் தலைவர், வைத்தியர் லக்னத் வெலகெதர பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (25) கையளித்தார்.   

இந்நிகழ்வில் உதவிப் பணிப்பாளர் (நிதி) சஜானி கலுபோவில, உதவி இயக்குநர் (ஆராய்ச்சி) பபசரா வீரசிங்க மற்றும் ஆராய்ச்சி அதிகாரி திரு. ஏ .டி தர்ஷன ஆகியோர் கலந்து கொண்டனர்.