--> -->

முத்துராஜவெலவில் சட்டவிரோத மதுபான உற்பத்திச் சாலை படையினரால் சுற்றி வளைப்பு

ஆகஸ்ட் 31, 2020

முத்துராஜவெலவில் பிரதேசத்தில் விமானப்படை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்களின் ஆல் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக மதுபானத்தை உற்பத்திச் சாலை சுற்றி வளைக்கப்பட்டது.

விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் மூலம் வான்வழி ரீதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முத்துராஜவெலவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்திச் செல்லப்பட்ட மதுபான உற்பத்தி சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படை மற்றும் விசேட அதிரடிப் படை வீரர்கள், படகுகள் மூலம் அடையாளம் காணப்பட்ட பிரதேசத்திற்கு விரைந்து சட்டவிரோத மதுபான உற்பத்தியை முறியடித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.