--> -->

தீப்பற்றிய எண்ணெய் தாங்கியை மீட்கும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர்

செப்டம்பர் 03, 2020

சற்றுமுன்னர் சங்கமன்கந்த துறைமுகத்திலிருந்து 38 கடல் மைல்களுக்கு அப்பால் தீப்பற்றி கொண்ட வெளிநாட்டு எண்ணெய் தாங்கி ஒன்றை மீட்பதற்காக கடற்படையின் இரண்டு கப்பல்கள் மற்றும்  அதிவேக தாக்குதல் படகு என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.   

கப்பல் எஞ்சின் அறையில் தீ பற்றியதாக தெரிவித்த கடற்படை பேச்சாளர், இதுவரையில் அதில் உள்ள வீரர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

குறித்த கப்பலுக்கு அருகாமையில் பயணித்த மற்றுமொரு கப்பலில் இருந்து கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய கடற்படையின் குறித்த கப்பல்கள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காடற்படையின் குறித்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக உளவுத்துறையில் ஈடுபடுத்தும் பீச்கிராப்ட் ரக விமானம் ஒன்றும் மற்றும் பம்பி பக்கெட் உடனான எம் ஐ 17 ரக உலங்குவானூர்தி ஒன்றும் தயார் நிலையில் உள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.