இலங்கை இஸ்ரேல் அமைப்பான ‘ஹெல சரண’ வினால் 50 கலன்கள் கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான திரவம் அன்பளிப்பு

செப்டம்பர் 10, 2020

கிருமி தொற்று நீக்கம் செய்வதற்கான ஐம்பது திரவ கலன்களை பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்னவிடம் நேற்று(9) அன்பளிப்பு செய்துள்ளனர்.

ஒவ்வொன்றும் நான்கு லீடர்கள் கொண்ட சுமார் 100,000 ரூபா பெறுமதியான குறித்த அன்பளிப்பினை இஸ்ரேல் நாட்டில் பணிபுரியும் இலங்கையர்களால் அமைக்கபட்ட இலங்கை இஸ்ரேல் அமைப்பான ‘ஹெல சரண’ வினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்பின் தலைவர் சுதம் தாஸ் டி சிவா சார்பாக அதன் ஒருங்கிணப்பாளர் சாந்த அமரசேன மற்றும் உறுப்பினர் மனோஜ் விக்ரமரத்ன ஆகியோரால் பாதுகாப்பு அமைச்சில் வைத்து குறித்த அன்பளிப்பினை வழங்க்கிவைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு  ஒத்துழைப்பு வழங்கும் வகையில் குறித்த அன்பளிப்பினை ஹெல ரணவிரு பலமுளுவ வினால் வழங்க்கிவைக்கப்பட்டதாக விக்ரமரத்ன பாதகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தலத் திற்கு தெரிவித்தார்.