--> -->

லான்ஸ் கோப்ரல் அபேகோன் தெற்காசிய போட்டியில் சாதனை

செப்டம்பர் 10, 2020

ஜேர்மன் நாட்டின் டிசாசு நகரில் இம்மாதம் (செப்டம்பர்) 8ஆம் திகதி இடம்பெற்ற சர்வதேச தடகள போட்டியில் இலங்கை இராணுவ வீரரான லான்ஸ் கோப்ரல் யுபுன் அபேகோன் 100 மீற்றர் ஓட்டப் போட்டியினை 10.16 செக்கன் வேகத்தில் ஓடி முடித்து தேசிய ரீதியில்  சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் இடம்பெற்ற 7 ஆவது உலக பாதுகாப்பு சேவைகள் தடகள 4 x 400 மீற்றர் போட்டியில் பங்கேற்ற லான்ஸ் கோப்ரல் அபேகோன் இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்று தந்து எமது நாட்டிற்கு பெருமையை சேர்த்துள்ளார்.

இவ்வீரர் தேசிய மற்றும் இராணுவ தடகள சங்கங்களில் உறுப்பினராக  உள்ளமை குறிப்பிடத்தக்கது.