இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

செப்டம்பர் 11, 2020

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன அவர்களை இன்று (செப்டம்பர் , 11) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது தூதுவர் அலைனா, நாட்டிலிருந்து கொவிட் 19 நோய்த் தொற்று நிலைமை பரவுவதை கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.

மேலும், எம்ரீ நிவ் டயமண்ட் கப்பலில் ஏற்பட்டுள்ள தீயினை அணைப்பதற்கு கடற்படை மற்றும் விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கைகளையும் பாராட்டினார்.  

மேலும், நாடுகடந்த குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், அதனை தடுத்தல் மற்றும் அதற்கான பயிற்சிகள் தொடர்பான விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில், பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ட்ராவிஸ் கோக்ஸ் மற்றும் பிரதி அரசியல் பிரதானி மார்கஸ் காபென்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.