--> -->

கின் கங்கையின் அடைப்புகள் கடற்படையினரால் நீக்கம்

செப்டம்பர் 24, 2020

காலி கின் கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள தொடங்கொடை மற்றும் வக்வெல்ல பாலங்களுக்கு அடியில் தேங்கியுள்ள குப்பைகளினால் ஏற்பட்டுள்ள அடைப்பினை நீக்கும் பணியினை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

தொடரும் மழையுடன் கூடிய காலநிலையினால் இப்பிராந்தியத்தில்  ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கினை தடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்தபாலங்களுக்கு அடியில் தேங்கி உள்ள குப்பை கூளங்கள் காரணமாக கங்கையின் இயல்பான நீரோட்டம் தடைபட்டு அதனை அண்டிய பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாய நிலைக்குள் உட்பட்டிருந்தது.

இந்தத் திட்டம் தெற்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதி கொமடோர் பிரியந்த பெரேராவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்தத் திட்டம் வருடாந்தம் தொடர்ச்சியாக ஒன்பது வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை காரணமாக ஏற்படும் அசாதாரண அசாதாரண நிலைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் கடற்படை வீரர்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.