கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் பாதுகாப்பு செயளாலருடன் பிரியாவிடைச் சந்திப்பு

செப்டம்பர் 29, 2020

பிரியாவிடைபெற்றுச்செல்லும் கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே சிநேகபூர்வ கலந்துரையாடல்  இடம்பெற்றது.

இதன்போது கடலோர பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகத்தின் சேவைகளை பெரிதும் பாராட்டிய பாதுகாப்பு செயலாளர் அவரின் எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் சிறப்புற அமைய தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும், இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.