கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகம் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

செப்டம்பர் 29, 2020

கடலோர பாதுகாப்பு படையின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள கொமடோர் அனுர ஏக்கநாயக்க பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவை இன்று (செப்டம்பர், 29) சந்தித்தார்.

கடலோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளராக கடமையாற்றிய ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க கடற்படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கொமடோர்  ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கொமடோர்  ஏக்கநாயக்க , கடலோர பாதுகாப்பு படையின்  ஏழாவது பணிப்பாளர் நாயகம் ஆகும்.
கடலோரப் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர், கடற்படையின் கடற்படை செயற்திட்ட  மற்றும் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றினார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.