--> -->

மேல் மாகாண அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ் பணிபுரிய அரசாங்கம் அனுமதி

ஒக்டோபர் 30, 2020

விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள அரச சேவை உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ்  தங்களது பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு  நேற்றைய தினம்  விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அதியுயர் ஆபத்தான  வலயம் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரச சேவை உத்தியோகத்தர்களும் வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ் தமது பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச சேவை உத்தியோகத்தர்கள்  சுகாதார அறிவுறுத்தலுக்கு அமைய தமது நாளாந்த பணிகளை வழமைபோன்று முன்னெடுக்க முடியும்.

கொரோனா வைரஸ் பரவல்  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இவ்வாண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுத்திக்கடி அமைய வீட்டில் இருந்து வேலை செய்தல் திட்டத்தின் கீழ் தமது பணிகளை முன்னெடுக்க முடியும்.

நோக்கம் இப் பிரதேசங்களிலும் வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கிலேயே வீட்டிலிருந்து வேலை செய்தல் திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.