--> -->

இலங்கையின் ஏற்பாட்டில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுகிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு 2020, நவம்பர் 27-28 திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

நவம்பர் 26, 2020

இந்திய, மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு

 

இலங்கையின் ஏற்பாட்டில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுகிடையிலான  கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு 2020, நவம்பர் 27-28 திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் அழைப்பின் பேரில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி ஆகியோர் இந்த முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள சிரேஷ்ட நிலை பிரதிநிதிகளை வழிநடத்துவார்கள் எனவும் பங்களாதேஷ், மொரீஷியஸ் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக பங்கேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உயர் மட்டத்தில் விடயங்களை உள்ளடக்கிய இந்த கலந்துரையாடல், கடல் பாதுகாப்பு தொடர்பான ஒன்றிணைந்த செயற்பாடுகள் கடல் வளங்கள் சார்ந்த விழிப்புணர்வு, சட்ட விதிகள், பயிற்சி, தேடல் மற்றும் மீட்பு, கடல் மாசடைதலை தடுத்தல், தகவல் பகிர்வு, கடல் கொள்ளைகளை முறியடித்தல், இந்து சமுத்திர பிராந்தியத்தில் போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் சட்டவிரோத கடத்தல் உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு குறித்த கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.  

இந்த மாநாடு 2014 ஆம் ஆண்டு  புதுடில்லியில் இறுதியாக இடம்பெற்றது.  அதனை தொடர்ந்து சுமார்  ஆறு வருடங்களின் பின்னர் இந்த வருடம்  இந்த மாநாடு இடம்பெறுகின்றது. அதற்கு முன்னரான மாநாடுகள் முறையே இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இடம்பெற்றது. இந்த முத்தரப்பு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள உயர் மட்ட பிரதிநிதிகள் மாநாட்டின் இடையே  இருதரப்பு சந்திப்புக்களையும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. (முடிவு).