--> -->

சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் என வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை

டிசம்பர் 01, 2020

தென்கிழக்குவங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து இன்று 1130 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இத் தொகுதியானது அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அது பெரும்பாலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான இலங்கையின் கிழக்கு கரையை நாளை(டிசம்பர் 02ஆம் திகதி) மாலையில் அல்லது இரவில்கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.