--> -->

புரவி சூறாவளி இலங்கையின் கிழக்கு கரையோரத்தின் ஊடாக கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு - பாதுகாப்பு செயலாளர்

டிசம்பர் 02, 2020

புரவி சூறாவளி இலங்கையின் கிழக்கு கரையோரத்தின்  ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

எந்தவொரு நிகழ்வுக்கும் முகம் கொடுக்கும் வகையில்  மாவட்டங்களில் உள்ள ஆளுநர்களை ஒருங்கிணைப்பதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  முன்னெடுத்துள்ளது.

சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு அந்தந்த பிரதேசங்களிலுள்ள மாவட்டச் செயலாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸார் உஷார் நிலையிலுள்ள அதேசமயம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுடன் இணைந்து தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடக்கு. கிழக்கு மற்றும் வன்னி பிரதேசங்களுக்கு பொறுப்பான பாதுகாப்பு படைகளின் தளபதிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம அந்தந்த பிரதேசங்களிலுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளாதாக அவர் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், அந்தந்த பிரதேசங்களிலுள்ள மாவட்டச் செயலாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸாருடன் இணைந்து  சூறாவளியினால் ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து மக்களை பாதுகாப்பதை பிரதான இலக்காக கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.